கடந்த ஆண்டு ஜப்பானில் குழந்தை பிறப்பு 10 லட்சம் ஆக குறைந்தது

287 0

201612231119405625_japan-births-drop-below-1-lakh-for-1st-time_secvpfகடந்த ஆண்டு ஜப்பானில் குழந்தை பிறப்பு 10 லட்சம் ஆக குறைந்துள்ளது. 20 மற்றும் 30 வயதுக்கு குறைவான பெண்கள் எண்ணிக்கையே இதற்கு காரணம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜப்பானில் குழந்தை பிறப்பு 10 லட்சம் ஆக குறைந்தது.சில ஆண்டுகளாக ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 1949-ம் ஆண்டில் குழந்தை பிறப்பு விகிதம் 20 லட்சத்து 69 ஆயிரத்து 600 ஆக இருந்தது.அதை தொடர்ந்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டில் 10 லட்சத்து 45 ஆயிரம் ஆக குழந்தை பிறப்பு விகிதம் இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு குழந்தை பிறப்பு விகிதம் 10 லட்சமாக குறைந்து விட்டது. முதன் முறையாக இதுவே குறைந்த பிறப்பு விகிதமாகும்.இது ஜப்பான் அரசை கவலை அடைய செய்துள்ளது. 20 மற்றும் 30 வயதுக்கு குறைவான பெண்கள் எண்ணிக்கையே குழந்தை பிறப்பு விகிதம் சரிவுக்கு காரணம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் குழந்தைகளை வளர்ப்பதற்கு அதிக செலவு ஏற்படுவதாலும் மக்கள் குழந்தை பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.