கம்பளை பிரதேசத்தில் இரண்டு இடங்களில் வீதியில் விழுந்த நிலையில் இருவர் உயிரிழந்திருக்கின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த சம்பவம் நேற்றுப் பதிவாகியுள்ளது.
கண்டி வீதி கோயிலுக்கு அருகில் ஒருவர் இவ்வாறு விழுந்துள்ளதுடன், மற்றையவர் ரிவச்வைட் பிரதேசத்தில் வைத்து விழுந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார் என்று கம்பளை பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாறு தரையில் விழுந்த நிலையில் மீட்கப்பட்ட இருவரது சடலங்கள் மீது பி.சி.ஆர் பரிசோதனை இன்று நடத்தப்படவுள்ளது.

