கடைவீதியில் உலாவந்த போப் பிரான்சிஸ்

374 0

201612221133126921_vatican-pope-francis-stroll-in-the-market_secvpfபோப் பிரான்சிஸ் வாடிகனில் உள்ள கடை வீதியில் உலா வந்தார். அவருடன் பொதுமக்கள் போட்டிபோட்டு ‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டனர்.

உலக கத்தோலிக்க மத கிறிஸ்தவ தலைவரான போப் ஆண்டவருக்கு எப்போதுமே அச்சுறுத்தல்கள் அதிகமாக இருக்கும். எனவே போப் ஆண்டவராக இருப்பவர்கள் மிகுந்த பாதுகாப்புடன் தான் வெளியே வருவது வழக்கம். சாதாரணமாக மற்ற இடங்களில் அவர்களை பார்க்க முடியாது.

ஆனால் தற்போது உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் இதில் வித்தியாசமானவராக இருக்கிறார். அவர் மக்கள் முன்பு சாதாரணமாக தோன்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் போப் ஆண்டவர் வாடிகனில் உள்ள கடை வீதியில் உலா வந்த சம்பவம் நடந்துள்ளது. தனது அரண்மனையில் இருந்து பிரான்சிஸ் திடீரென அங்கிருந்து வெளியே வந்தார். ஒரு சில பாதுகாவலர்கள் மட்டும் அவருடன் வந்தனர்.

வாடிகன் கடை வீதிக்கு சென்ற அவர் அங்குள்ள மருந்து கடைக்கு சென்றார். அவருக்கு காலில் ஏற்கனவே வலி இருந்து வந்தது. இதை தடுப்பதற்காக மருத்துவ குணம் கொண்ட செருப்பு வேண்டும் என்று கேட்டு கடைக்காரரிடம் கேட்டார்.

தகுதியான செருப்பை கடையில் வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். திடீரென போப் ஆண்டவரை கடையில் பார்த்த மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. அவர்கள் போப் ஆண்டவருடன் ‘செல்பி’ படம் எடுத்துக் கொண்டனர். அதற்கு தாராளமாக அனுமதித்து போஸ் கொடுத்தார்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மிகவும் எளிமையானவர். 2013-ம் ஆண்டு அவர் போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் இதற்கான பணிகளுக்கு சென்ற நேரத்தில் கூட தனது சூட்கேசை தானே கையில் எடுத்து சென்றார். ஓட்டலில் தங்கிய அறை கட்டணத்தை கூட அவரே தனது சொந்த செலவில் செலுத்தினார்.