முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றத் தடை உத்தரவு பெற்ற பொலிஸார்

355 0

முள்ளிவாய்க்காலில் எந்த நிகழ்வும் நடத்தக் கூடாது மக்கள் கூடக் கூடாது பொது இடத்தில் வைத்து எந்த நினைவுகூரக் கூடாது என்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.


அத்துடன் முள்ளிவாய்க் காலில் நினைவேந்தலில் ஈடுபட ஐந்து பேருக்கு எதிராகவும் பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 18ஆம் திகதி நினைவுகூரப்படவுள்ளது.

இந்நிகழ்வை தமிழ் மக்கள் நினைவேந்துவதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் முல்லைத்தீவு பொலிஸார் நேற்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் தடை உத்தரவு ஒன்றைக் கோரினர்.

இதன்படி, கொவிட் 19 நிலையைக் கருத்தில் கொண்டு 16 ஆம் திகதி தொடக் கம் 22 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்காலில் எந்த நிகழ்வும் நடத்தக் கூடாது, மக்கள் கூடக் கூடாது, பொது இடத்தில் வைத்து நினைவுகூரக் கூடாது என்று அந்த உத்தர
வில் நீதிமன்றைக் கோரினர்.

அத்துடன், முல்லைத்தீவு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன்,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி ம.ஈஸ்வரி, தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் பீற்றர் இளஞ்செழியன், தவிசாளர் க.விஜிந்தன், அருட்தந்தை வசந்தன் ஆகியோரின் பெயர் குறிப்பிட்டு நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.