தூதர் கொலை சம்பவம் ரஷ்யா, துருக்கி இடையிலான ஒத்துழைப்பை பாதிக்காது

245 0

201612202248329580_turkey-russia-agree-killing-wonot-harm-cooperation-erdogan_secvpfரஷிய தூதர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை பாதிக்காது என்பதில் துருக்கி மற்றும் ரஷ்யா உறுதியாக உள்ளது என்று அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

துருக்கிக்கான ரஷிய தூதராக பதவி வகித்து வந்தவர் ஆண்ட்ரே கார்வேஸ். அங்காரவில் நடந்த ஓவிய கண்காட்சியை பார்வையிட வந்த ஆண்ட்ரேவை மெவ்லட்மெர்ட் அய்டின் டாஸ் (22) என்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.

சிரியாவின் காலப்போ நகரில் ரஷியாவும், துருக்கியும் இணைந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தூதர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை பாதிக்காது என்பதில் துருக்கி மற்றும் ரஷ்யா உறுதியாக உள்ளது என்று அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த தாக்குதலால் ரஷ்யா உடனான எங்களுடைய ஒத்துழைப்பு, குறிப்பாக சிரியா விவகாரத்தில் பாதிக்காது. இந்த விவகாரத்தில் நாங்கள் ரஷ்யா அதிபர் உடன் ஒரே மாதிரியான புரிதலை பகிர்ந்து கொண்டுள்ளோம்” என்று கூறினார்.ரஷ்யா, துருக்கி இடையிலான உறவை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.