யாழில் 37 பேர் உட்பட வடக்கில் மேலும் 43 பேருக்குத் தொற்று : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

272 0
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 37 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்றுப் புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 824 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 43 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 37 பேருக்கும் கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் தலா மூவருக்கும் என 43 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 21 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் 30 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 8 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற 6 பேருக்கு தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
வவுனியா பூவரசங்குளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் கண்காணிக்கப்பட்ட மூவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.