மரத்தில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்பு

36 0

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பரகும்புர பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (03) இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்கு முன்னால் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சரத் உதயகுமார் வயது (29) எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.