வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளராக சு. அன்னமலர் நியமனம்!

221 0

வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி. அன்னமலர் சுரேந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 05.05.2021 முதல் கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இது வரை வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளராக கடமையாற்றிய முத்து இராதாகிருஸ்ணன் யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் நிலையிலேயே திருமதி அன்னமலர் சுரேந்திரன் நியமிக்கப்படுகின்றார்.

கடந்த நான்கு வருடங்களாக வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிய இவர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாவார்