ஒன்றரை கோடி கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு

281 0

கொரோனா தடுப்பூசிகள் எல்லா மாவட்டங்களிலும் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 7 லட்சம் கொரோனா தடுப்பூசி ‘டோஸ்’கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழக அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வரும் மே 1-ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவின்பேரில் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா தடுப்பூசிகள் எல்லா மாவட்டங்களிலும் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 7 லட்சம் கொரோனா தடுப்பூசி ‘டோஸ்’கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. தினசரி சராசரியாக 1.15 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இந்நிலையில் ஒன்றரை கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை 55.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.