இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் வீதி விபத்துக்களினால் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவர்களில் ஆறு பேர் நேற்று சனிக்கிழமை நடந்த விபத்துக்களில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர். ஏனைய இருவர் அதற்கு முன்னர் நடந்த விபத்துக்கிளில் சிக்கியவர்கள் காயமடைந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டள்ளார்.
மோட்டார் சைக்கிள் சாரதிகள் ஐந்து பேரும், பாதசாரி ஒருவரும், முச்சக்கர வண்டி பயணியொருவர் மற்றும் லொறியொன்றின் உதவியாளர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

