பிரதமர் ஆனார் மஹிந்த

344 0

Former President Mahinda Rajapaksa Request to Change 20th Amendmentமஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரின் நிழல் அமைச்சரவை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து இந்த நிழல் அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி நிழல் எதிர்க்கட்சியின் அமைச்சரவையில் நிழல் பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பௌத்த சாசன மற்றும் பாதுகாப்பு அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன.
நிழல் பொருளாதாரதுறை அமைச்சராக தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். நிழல் கல்வி அமைச்சராக  டளஸ் அழகப்பெரும பெயரிடப்பட்டுள்ளார். நிழல் நிதியமைச்சராக பந்துல குணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்
நிழல் வெளியுறவு அமைச்சராக நாமல் ராஜபக்சவும் பெருந்தெருக்கள் துறை அமைச்சராக ச்சமல் ராஜபக்சவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிழல் உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சராக ரஞ்சித் சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.
நிழல் துறைமுகங்கள் துறை அமைச்சராக குமார வெலகமவும் தொழில் அமைச்சராக காமினி லொக்குகேயும் நியமனம் பெற்றுள்ளனர். நிழல் கிராமிய கைத்தொழில் அமைச்சராக எஸ் எம் சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு வீடமைப்புத்துறைக்கான நிழல் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. பிவிருது ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவுக்கு நீதி மற்றும் சமாதானத்துறை நிழல் அமைச்சராக பெயரிடப்பட்டுள்ளார்.