வட – கிழக்கில் இளைஞர்கள் எதிர்கால இளைஞர்களுக்காகவே உயிர் தியாகம் செய்தனர் – பசுபதிப்பிள்ளை

350 0

66-1வடக்குகிழக்கில் இளைஞர்கள் எதிர்கால இளைஞர்கள் நலனுக்காகவே தமது உயிர்களை தியாகம் செய்தனர். எனினும் அந்த எதிர்கால இளைஞர்கள், சமூகத்தை அழிவுப்பாதைக்கு இட்டுசெல்கின்றனர் என்று வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் உரையாற்றினார். பாடசாலைகளுக்கு அடுத்தபடியாக சமூக நடத்தைகளையும் பண்பாட்டையும் இளையோருக்கு போதிக்கின்ற இடமாக விளையாட்டுக்கழகங்கள் திகழ்கின்றன.
எனினும் இன்றைய இளைய சமூகத்தில் பலர் கலாசார விடயங்களிலும் விளையாட்டு நிகழ்வுகளிலும் ஆர்வமின்றி சமூகப்பிறழ்வான நடத்தைகளில் ஆர்வமுள்ளவர்களாக திசைமாறிச் செல்கின்றனர். இருபது இருபத்தைந்து வயதுடைய இளைஞர்களே தங்களது உயிர்களைத் தியாகம் செய்து தமது எதிர்கால சந்ததியினர் பாதுகாப்பாகவும் ஒழுக்கமாகவும் இருக்கவேண்டும் என்று சிந்தித்தார்கள்.
இருப்பினும் இன்று அதே வயது இளைஞர்கள் சிலர் தவறாக சிந்தித்து தவறாக செயற்பட்டு சமூகத்தை அழிவுக்கு இட்டுச்செல்கிறார்கள் என்றும் பசுபதிப்பிள்ளை குறிப்பிட்டார்.