யேர்மனி ஸ்ருட்காட் நகரில் “நாடுகடத்தப்படுவதற்கு பதிலாக வதிவிட உரிமை” என்னும் போராட்டத்தில் ஈழத்தமிழர் மக்கள் அவை

763 0

அகதிகள் உரிமைக்கான அமைப்பு  முன்னெடுத்த “நாடுகடத்துவதற்கு பதிலாக தங்குவதற்கான உரிமை” என்ற பொருள்பட்ட போராட்டத்தில் பல்லின மக்களோடு இணைந்து, புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசிக்கும் தமிழீழத் தமிழர்களும் பங்கெடுத்து தமது பக்க நியாயத்தையும் கோரிக்கைகளையும் ஜேர்மனிய அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வானது நேற்று மாலை ஜேர்மனிய நேரம் 16.00 மணிக்கு பாடன்வூட்டன்பேர்க் மாநிலத்தின் நகரங்களான ஸ்ருட்காட் மற்றும் பிரைபோக் ஆகிய நகர மையங்களில்  கொரோனா பெருந்தொற்றுத் தாக்கத்தின் மத்தியிலும் நோய்த்தாக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்றுள்ளது.

அண்மையில் திட்டமிட்ட நடவடிக்கை ஒன்றை ஜேர்மனிய அரசு நாடு தழுவிய அளவில் செய்திருந்தது. அதில் அகதி நிலை வதிவிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டு பிரத்தியேக சிறையில் அடைக்கப்பட்டதும் அதன் பின்பு இலங்கையின் இனவழிப்பு அரசிடம் அவர்களை ஒப்படைத்து தமிழீழத் தமிழர்களின் நல் எண்ணங்களில் பெரும் ஏமற்றத்தை ஏற்படுத்தி இருந்ததும் நடந்து முடிந்தவை.
இந்த நிலையில் Flüchtlingsrat Baden-Württemberg மற்றும் Seebrücke ஆகியவை இணைந்து ஜேர்மன் அரசுக்கு பெரும் அழுத்தத்தை பிரயோகித்து நாடுகடத்தப்படும் அகதிநிலைக் கோரிக்கையாளர்களை  நாடு கடத்தாமல் இங்கே வதிப்பதற்கு அனுமதிக்குமாறு குரல் எழுப்பினர்.

ஜேர்மனிய மொழியில் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவண்ணம் இந்த கோரிக்கைப் போராட்டக்காறர்கள் தமது நாட்டில் இருந்து உயிர் அச்சுறுத்தல் இருப்பதால்,  உயிரைக் காப்பாற்ற என்று நாட்டு விட்டு வெளியேறி இங்கே அகதியாக வாழ உரிமை கேட்டவர்கள் அவர்களை நாடுகடத்துவதன் ஊடாக மீண்டும் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்நோக்க வைக்க வேணாம் என்ற கருத்துக்களோடு பல பதாதைகளைத் தாங்கி நின்றார்கள்
இப் போரட்டத்தில் பல்லின மக்களோடு இணைந்து தமிழ் மக்களும் தமது கோரிக்கைப் போராட்டத்தை நடாத்தினர்.