சிறுவர்கள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சந்தேகநபரான பிக்குக்கு விளக்கமறியல்

19 0

திருகோணமலை- கந்தளாய் பகுதியிலுள்ள  விகாரையொன்றுக்கு சென்ற சிறார்கள் இருவர் மீது, பாலியல் வன்கொடுமை புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிக்குவை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார்

குறித்த சந்தேகநபரான பிக்குவை, எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மேனக்கா தமயந்தி நேற்று (புதன்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கந்தளாய் பகுதியைச் சேரந்த 12 வயது மற்றும் 14 வயதான இரு சிறுவர்களை, பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர்களுடைய பெற்றொர், குறித்த பௌத்த பிக்கு மீது பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய கைது செய்த பொலிஸார் அவரை நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இருந்தனர்.

இதன்போது வழக்கு தொடர்பான மனுவை விசாரணைக்கு உட்படுத்திய நீதிபதி, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தம்பலகாமத்தைச் சேர்ந்த (55 வயது) விஹாராதிபதியே கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.