யாழ். நகரில் பெட்ரோல் குண்டு தாக்குதல்!

31 0

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்துக்கு அருகில் யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.