சிம்பாபேவின் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஆளும் கட்சியின் ஒருமித்த ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் 94 வயது பூர்த்தியை அடையும் இவர் 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும் 2013ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் திருத்தத்தில் அவர் மேலும் ஒருமுறைதான் தலைவராக இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆபிரிக்க பிராந்தியத்தில் சுதந்திரமடைந்த காலம் தொட்டு ஒரு நாட்டை தொடர்ச்சியாக ஆண்டு வரும் ஜனாதிபதி இவராவார்.
இவரின் ஆட்சியில் பல்வேறு மோசடி குற்றச்சாட்டல்கள் சுமத்தப்பட்டாலும் இவரின்ஆட்சி கையிருப்பு தொடர்ந்த வண்ணமே உள்ளது.
கட்சியின் வேட்பாளரை தெரிவு செய்யும் இளம் உறுப்பினர்களுக்கான மாநாடு இடம்பெற்றப்போதே இவர் கட்சியின் ஒருமித்த ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் வாழ்நாள் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என பாடலும் பாடப்பட்டது.
இதில் முகாபேயும் அப்பாடலை பாடியதோடு, தனது முகம் பதிக்கப்பட்ட உடையை அணிந்து தனக்கான அரசியல் விளம்பரத்தை வெளிபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


