உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

27 0

சட்டசபை தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் மத்திய மந்திரிகள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோரின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகாா்கள் எழுந்தன.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ஜ.க. சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 7-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.