அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு

24 0

தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் நேற்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது அவர் வாக்குப்பதிவு மையத்தில் இருந்து 100 மீட்டருக்குள் கட்சி கொடி கட்டிய காரில் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். மேலும் அவர் கழுத்தில் கட்சி துண்டு அணிந்து இருந்தார்.

இது தேர்தல் விதிமுறை மீறல் என கூறி தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரி ராஜா முகமது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்தனர்.