தடுத்து நிறுத்தப்பட்டது மிருசுவில் தனியார் காணியை அபகரிக்கும் முயற்சி- போராட்ட களத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!(காணொளி)

485 0

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணியை அரசாங்கம் சுவீகரிக்கும் நோக்கிலே நிரலஅளவைத்திணைக்களம் தனியார் காணியை அளக்க முற்பட்ட வேளை அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக போராட்டம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தனியார் காணியை விடுதலைப்போராட்ட காலத்தின் பிற்பாடு ஸ்ரீலங்கா இராணுவத்தினர் அபகரித்து அதிலே 52 வது படைப்பிரிவு முகாமினை அடாத்தாக நிறுவியிருந்தனர்.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று காணி இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படுகின்றதென்றும் காணியின் உரிமையாளருக்கு நட்டஈடு வழங்குவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது. எனினும் காணியின் உரிமையாளராகிய தாயார் தனக்கு நட்டஈடு எதுவும் வேண்டாம் என்றும் தனக்கு தன்னுடைய காணியே வேண்டுமெனவும் தெரிவித்து வருகின்ற வேளையில் இன்றையதினம் அத்துமீறாக நிலத்தினை அளக்க முற்பட்ட வேளை குறித்த தாயாருக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து நிலத்தினை அளக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏனைய கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டுடிருந்தமை குறிப்பிடத்தக்கது.