புதிய முஸ்லிம் திடீர் மரண விசாரண‍ை அதிகாரிகளை (கொரோனர்கள்) ; நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை நீதி அமைச்சகம் நிராகரித்துள்ளது.
அத்துடன் தற்போதுள்ள வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் போது வழமையான நெறிமுறை பின்பற்றப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நியமனங்கள் செய்யும்போது தற்போதுள்ள நெறிமுறைக்கு எதிராக செல்ல எந்தவொரு அறிவுறுத்தலையும் நீதி அமைச்சர் வெளியிடவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

