32 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு கப்பல் செல்ல அனுமதி

238 0

download-1வடக்கிலிருந்து இந்தியாவிற்கு 32 வருடங்களின் பின்னர் பயணிகள் கப்பலுக்கான அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் இரண்டாம் திகதி முதல் ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை தென்னிந்தியாவில்நடைபெறவுள்ள ஆலய உற்சவமொன்றில் கலந்துக்கொள்வதற்காக செல்லும் பக்தர்களின் நலனுக்காகஇந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிந்தியாவில் நடைபெறுகின்ற ஆலய உற்சவத்தில் சுமார் 2000 பக்தர்கள்கலந்துக்கொள்ளவுள்ளதுடன், அவர்களில் இந்தியா செல்வதற்கு பயணிகள் கப்பலொன்றை பெற்றுத்தருமாறு வடக்கு ஆளுநரிடம் தாம் கோரிக்கை முன்வைத்ததாக சிவசேனா அமைப்பின் தலைவர்மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து இந்தியா நோக்கி செல்லும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும்அந்த நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தம்மிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான கடிதம், பாதுகாப்பு அமைச்சு மற்றும்கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அதனூடாகவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த பயணத்திற்காக பயண சீட்டு, விஸா மற்றும் கப்பலுக்கான கட்டணம் ஆகியவற்றைஇந்த உற்சவத்திற்கு செல்லும் பக்தர்கள் பொறுப்பேற்க வேண்டும் என வடக்கு ஆளுநர்குறிப்பிட்டுள்ளார். மேலும், யாழ்ப்பாணத்திற்கும், இந்தியாவிற்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையொன்றைஆரம்பிக்கும் எண்ணம் காணப்படுவதாகவும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.