2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தமிழக சட்டசபை தேர்தலுடன், நாட்டின் கடைக்கோடி பாராளுமன்ற தொகுதியான கன்னியாகுமரியில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தொகுதியின் எம்பி வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானதையடுத்து, இடைத்தேர்தல் நடக்கிறது. தந்தை விட்டுச் சென்ற பணியை தொடர விரும்பிய விஜய் வசந்துக்கு கட்சி தலைமை வாய்ப்பு கொடுக்க, தேர்தல் களத்தில் இறங்கி சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார் விஜய் வசந்த்.
2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இத்தொகுதியில் வசந்தகுமார் சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே இலக்கை எட்டிப்பிடிக்கும் வியூகத்துடன் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் விஜய் வசந்த். குமரி மாவட்ட வளர்ச்சிக்காக பாடுபட்ட தன் தந்தை விட்டுச் சென்ற பணியை நிறைவேற்ற தனக்கு வாய்ப்பு தரும்படி பிரசாரம் செய்துவருகிறார்.

