வடக்கில் 29 பேருக்கு நேற்று உறுதியானது

315 0

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 27 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
நேற்றுச் செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார.
சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 320 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக சிறி ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு அனுப்பப்பட்டன. இவர்களில் 7 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடங்களில் 755 பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, 22 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள்
57 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 7
பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரிப் பிரிவில் மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் 2 பேர் திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதியைச் சேர்ந்தவர்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக மற்றும் முகாமைத்துவப் பீட மாணவன் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர் வவுனியாவைச் சேர்ந்தவர்.
மேலும் திருநெல்வேலிச் சந்தைத் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்புடைய இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் உடுவில் சுகாதாரமருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு வந்த ஒருவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

சாவகச்சேரி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் நோய் அறிகுறி
களுடன் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனா
நோய்த்தொற்று நேற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
கிளிநொச்சியில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது என்றும் மருத்துவர்
கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர கடைத்தொகுதியில் 800 இற்கும் மேற்
பட்டோரிடம் பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்காக கொழும்பு
முல்லேரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.