தேடப்பட்டு வந்த தந்தை சடலமாக மீட்பு

368 0

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நாலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

புலத்கோபிட்டியவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 77 வயதுடைய எம்.செபஸ்தியன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி புலத்கோபிட்டியவிலிருந்து இம்புல்பிட்டிய பகுதியிலுள்ள தனது மகனின் வீட்டுக்கு வந்த குறித்த நபர் 20 திகதி காணாமல் போன நிலையில் அன்றைய தினம் மகன் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்

முறைப்பாட்டையடுத்து பொலிஸாரும் பிரதேசவாசிகளும் தேடப்பட்டு வந்த போது நேற்று (29) இம்புல்பிட்டிய பகுதியில் குறித்த மகனின் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் சடலமொன்று கிடப்பதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சடலம் தனது தந்தையென மகன் உறுதி செய்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.