போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 20 அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் புத்திகராஸ்ரீகல முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகளை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

