மத்திய அரசு தமிழகத்தின் மீது நடத்தும் தாக்குதலை எதிர்கொள்ள திமுகவிடம் தான் சக்தி உள்ளது என பொதுக்கூட்டத்தில் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் பரப்புரை பொதுக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், பழனிசாமியாக இருந்தாலும், பன்னீர்செல்வமாக இருந்தாலும், அவர்களின் நோக்கம் மக்களை பற்றி கவலையில்லை பணம் தான் ஊழல் தான் என தொடந்து நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு தமிழகத்தின் மீது ரசாயன தாக்குதலையும், கலாச்சார தாக்குதலையும் நடத்தி வருகிறது. இதற்கு ஆளும் அதிமுக துணை செல்கிறது. இந்தி, சம்ஸ்கிருதம், மீத்தேன், நீட் திணிப்பு உள்ளிட்டவற்றை தமிழகத்தில் திணித்து வருகிறது. இதனை எதிர்க்க கூடிய சக்தி திமுகவிடம் தான் உள்ளது.
ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல, தமிழகத்தின் உரிமைகளை மீட்பதற்கான தேர்தல் இது.
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியவில்லை, அதனால் அதிமுகவை மிரட்டி, அச்சுறுத்தி அவர்கள் நிழலில் பயணம் செய்ய ஈடுபட்டுள்ளார்கள். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு நடந்த அனைத்து சம்பவங்களும் பாஜகவின் சதிகள் இருப்பது அவர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை வைத்தே தெளிவாக தெரிகிறது.
37 சதவீத வாக்குகளை பெற்று பாஜக இன்றைக்கு ஆட்சியில் உள்ளதா என்றால், 63 சதவீத மக்கள் பாஜகவை எதிர்த்து பல்வேறு காட்சிகளுக்கு வாக்குகளை பிரித்து போட்டுவிட்டார்கள்.
மேலும், ராகுல் என்னை சகோதரர் என்றே அழைக்க சொல்வார்.,அவர் என் சகோதரர் தான் என்று கூறி தமிழ்நாட்டில் அமைந்த கூட்டணி போல் இந்திய அளவில் கூட்டணி அமைக்க ராகுல் பொறுப்பேற்க வேண்டும் என பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்பு முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

