இலங்கையின் உயரம் பாய்தலின் சாம்பியனான உஷான் நிவங்க பெரேரா, அமெரிக்கா டெக்ஸாஸ் உயர் கல்வி நிறுத்தினத்தின் விளையாட்டுப் போட்டியில், இலங்கையின் உயரம் பாய்தலில் புதிய சாதனையை இன்று (28) படைத்தார்.
அவர், 2.28 மீற்றர் உயரம் பாய்ந்து இலங்கையின் சாதனையை புதுப்பித்தார். பழைய சாதனையின் பிரகாரம் 2004 ஆம் ஆண்டு மஞ்சுள குமார வீரசேகர என்பவர், 2.27 மீற்றர் பாய்ந்து சாதனையை நிலைநாட்டியிருந்தார்.
உஷான் நிவங்க பெரேரா, நீர்கொழும்பு மாரிஸ்டெல வித்தியாலயத்தின் பழைய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சாதனையை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்தி பாராட்டியுள்ளார்.

