ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தம்மை அச்சுறுத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சுந்திரகட்சியின் தலைவர் பதவியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இருந்த போது, அந்த பதவியில் இருந்து அவரை விலக அறிக்குமாறு வலியுறுத்தியே தமக்கு அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டதாக கோட்டாபாய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் சென்றுள்ள கோட்டபாய ராஜபக்ஸ, அங்குள்ள வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த போது நேற்று இதனை தெரிவித்தார்.
ஜனநாயகத்தை பேண வந்தோம் என கூறுபவர்கள் ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்தில், துமிந்த திஸாநாயக்க தமக்கு அழைப்பு மேற்கொண்டு கூறினார்.
தலைவர் பதவியை தருமாறு கூறுங்கள் இல்லையேல் நீதிமன்றம் சென்று அதனை நாங்கள் பெறுவோம் என தெரிவித்தார்.
இதுவா ஜனநாயகம் எனவும் கோட்டா கேள்வி எழுப்பினார்.

