வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற அமைதியற்ற செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தொடர்பில்லை என்று புனவாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மூவரை சமூக மயப்படுத்தல் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் இயந்திரங்களை வழங்கும் நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க இவ்வாறு கூறினார்.
வடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற எந்தவொரு அமைதியற்ற செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று புனவாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு பயிற்சி வெற்றிகரமாக அமைந்ததால் அவர்கள் மீண்டும் ஒருபோதும் மோதலுடன் தொடர்புபட மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதியில் புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளை முற்றாக நிறைவு செய்து கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.