புர்கினா பாசோவில் ராணுவ நிலை மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 11 பேர் பலி

228 0

201612161959047165_eleven-killed-in-attack-on-burkina-faso-military-post_secvpfமேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோ நாட்டில் ராணுவ நிலை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 11 வீரர்கள் பலியானார்கள்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடு புர்கினா பாசோ. இந்த நாட்டின் வடக்குப் பகுதியில் மாலி உள்ளது. கிழக்குப் பகுதியில் நைஜரும், தென்கிழக்குப் பகுதியில் பெனினும் உள்ளது.

இந்த நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது மிகமிக அரிது. கடந்த ஜனவரி மாதம் இந்நாட்டின் தலைநகர் வாகடூகுவில் உள்ள ஒரு ஓட்டலில் அல் கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பில் உள்ள கும்பல் நடத்திய தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர்.

மாலிக்கும், புர்கினாவிற்கும் இடையே உள்ள நீண்ட பரப்புடைய பாலைவனம் வழியாக தீவிரவாத கும்பல் புர்கினாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்துகின்றனர். இது அந்நாட்டுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் மாலி எல்லையில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் ராணுவ நிலை ஒன்று உள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 10.30 மணி) அடையாளம் தெரியாத 40 பேர் கடும் ஆயுதங்களோடு ராணுவ நிலை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 11 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று அடையாளம் காண முடியவில்லை என்று ராணுவம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.