சிரியா விவகாரத்தில் ரஷியாவின் கைகளில் ரத்தக்கறை- ஒபாமா

321 0

201612171139249370_syria-assad-russia-and-iran-have-blood-on-hands-obama_secvpfசிரியா விவகாரத்தில் ரஷியா, ஈரான் மற்றும் சிரியா அரசின் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த ஆண்டில் இறுதிமுறையாக நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-ரஷியா, ஈரான் ஆகிய நாடுகளின் துணையுடன் சிரியாவில் வாழும் மக்கள் மீது பஷர் அல் ஆசாத் தலைமையிலான அந்நாட்டு அரசு நடத்திவரும் தாக்குதலை எதிர்ப்பதில் ஒட்டுமொத்த உலகமும் ஒன்றிணைந்துள்ளது. இந்த அட்டூழியமும் ரத்தக்கறையும் அந்த நாடுகளின் கைகளில் படிந்துள்ளன.

அமெரிக்காவின் அதிபர் என்ற முறையில் இதுபோன்ற அத்துமீறல்களில் தலையிட வேண்டியது எனது பொறுப்பாக உள்ளது. பறிபோகும் உயிர்களை தடுக்கவும், அவதிப்பட வேண்டிய அவசியமே இல்லாத குழந்தைகளை பாதுகாக்கவும் என்னால் எதுவும் செய்ய முடியுமா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

சிரியா விவகாரத்தில் அமெரிக்க ராணுவம் நேரடியாக தலையிட்டாக வேண்டும் என்று நான் நம்பினாலும், அங்கு போர் நடத்த வேண்டும் என்ற பரவலான பொதுக்கருத்து ஏற்படவில்லை. ஆனால், அதுதான் சரியான முடிவு என்பதுபோல் தோன்றினாலும் அது அவ்வளவு மலிவான காரியமல்ல. சிரியாவை நாம் கைப்பற்றும்வரை நமக்கு பிரச்சனை இருக்கத்தான் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.