டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் சரிவு

352 0

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (புதன்கிழமை) மேலும் சரிவை சந்தித்துள்ளது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 201.75 ரூபாயை எட்டியதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலரிற்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 200 ரூபாயாக அதிகரித்தது.

இதற்கு முன்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவிலேயே அமெரிக்க டொலரிற்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 200 ஐ கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.