அரசாங்கத்தின் தோல்வி பொதுமக்கள் மேலும் இன்னல்களை எதிர்கொள்ள வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தற்போது அனைத்து துறைகளிலும் அரசாங்கம் தோல்வியுற்ற்றுள்ளது என கூறினார்.
தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆண்டு முழுவதும் நீடித்தால் எதிர்காலத்தில் பொது மக்களுக்கு மிகவும் கடுமையான பொருளாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே அரசாங்கம் தனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்து பொதுமக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஜே.சி.அலவத்துவல கேட்டுக்கொண்டுள்ளார்.

