எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக பாடத்திட்டங்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாத்திற்குள் நிறைவு செய்வது சவாலானது என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

