இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

337 0

இலங்கையில் நேற்றைய தினம்  314 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 600 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 278 பேர் மினுவாங்கொட – பேலியகொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள்.

ஏனையவர்களில் 33 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என்பதுடன், மூன்று பேர் சிறைச்சாலை கொத்தணியுடனும் தொடர்புடையவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 253 ஆக காணப்படுகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 2 ஆயிரத்து 821 பேர் மாத்திரம் சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேகத்தில் 347 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதேவேளை, நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கனத்தேவெவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு குருணாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஹோமாகம தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அவர், கடந்த 12ஆம் திகதி உயிரிழந்தார். இவரது உயிரிழப்புக்கு கொரோனா தொற்று நிமோனியா மற்றும் இரத்தம் நஞ்சானமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 526ஆக அதிகரித்துள்ளது.