யாழில் இன்று உலக சிறுநீரக தினம்!

287 0

உலகம் முழுவதும் சுமார் 85 கோடி பேருக்கும் மேல் சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை சர்வதேச சிறுநீரக தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி மார்ச் 11ஆம் திகதியான உலகம் முழுவதும் சிறுநீரக தினம்( World Kidney Day 2021) அனுசரிக்கப்பட்டது.

இந்த ஆண்டு “சிறுநீரக நோய் இருப்பினும் நன்றாக வாழ்வது” என்ற கருப்பொருளை மையமாக வைத்து சிறுநீரகத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

எமது உடலில் மிக முக்கிய பாகங்களில் ஒன்றாக இருக்கும் சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்து கொள்வது எவ்வாறு என்றும் ஆண்டுதோறும் இந்நாளில் சிறுநீரக நிபுணர்களால் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது

யாழ் மாவட்டத்தில் இன்று(12)  Fresenius Medical Care நிறுவனத்தால் உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்பட்டது. ,மருத்துவர்களும் தாதியர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சென்னையில் இருந்து காணொளி மூலம் வளவாளர் சுமேஸ் மணி  கலந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் சிறுநீரக பாதிப்பு உள்ளோர் அதிகமாக உள்ள போதிலும் அதற்கான மருத்து வசதி மிககுறைவாக உள்ளதாகவும் குறிப்பாக இடவசதி, மருத்துவர்கள், தாதிகள் பற்றாக்குறை உள்ளதாகவும் வைத்திய கலாநிதி பவானந்தன் குறிப்பிட்டார்.

 

 

 

மேலும் சிறுநீரக தானம், அதன் தேவை, அதுசார்ந்த விழிப்புணர்வு மக்களிடையே மிக மிக குறைவாக உள்ளது எனவே, அது சார்ந்த விழிப்புணர்வை ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதனை வைத்திய கலாநிதி பிரம்மா குறிப்பிட்டார்.