அசோக் அபேசிங்கவை இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு

302 0

பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள் ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் தற்கொலை குண்டு தாரிகளுக்கு நிதி கிடைத்த விதம் குறித்து குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

 

அந்த கருத்து தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளுமாறு பாராளு மன்ற உறுப்பினர்கள் ஆறு பேரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரி வித்தார்.

அந்த முறைப்பாட்டிற்கு அமையப் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்து விசாரணை மேற்கொள் வதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்றைய தினம் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் சமூகமாக்காததால் இன்றைய தினம் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.