நாயாற்றுப்பாலத்தில் வாகன விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்

327 0

முல்லைத்தீவு- நாயாற்றுப்பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த மூவர்  வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று (திங்கட்கிழமை) மதியம், நாயாற்றுப் பாலத்தில் மழையின் காரணமாக சறுக்கல் நிலை காணப்பட்டடுள்ளது. இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது.

இதன்போது அதில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக, முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.