பதுளை புற்றுநோய் பிரிவில் மூன்றாவது கொவிட் மரணம்!

194 0

பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா தொற்றாளர்களில் மற்றுமொருவர் நேற்றிரவு (07) உயிரிழந்துள்ளார்.

பஸ்ஸர, யூரி தோட்டத்தை சேர்ந்த 62 வயதுடைய நபரொருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றன.

கொவிட் 19 தொற்று காரணமாக குறித்த வைத்தியசாலையில் இதற்கு முன்னர் இரண்டு மரணங்கள் பதிவாகியிருந்தன.

கடந்த 05 ஆம் திகதி மரணமொன்று பதிவாகியிருந்த நிலையில் நேற்று (07) காலை குறித்த சிகிச்சை பிரிவில் இருந்த மேலும் ஒரு புற்றுநோய் நோயாளர் உயிரிழந்ததாக ஊவா மாகாண அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் வார்டில் கடந்த தினங்களில் கொவிட் 19 தொற்றாளர்கள் 34 பேர் இனங்காணப்பட்டனர்.

அவர்களுக்கிடையில் நோயாளர்கள் மற்றும் அவர்களை கவனித்துக் கொள்ள தங்கியிருந்த சிலர் மற்றும் கர்ப்பிணி வைத்தியர் ஒருவர் உட்பட அலுவலக ஊழியர்கள் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் மேலும் இரு தொற்றாளர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் பதிவானதாக அவர் மேலும் தெரிவித்தார்.