போப் பிரான்சிஸ்ஸின் ஈராக்கிற்கான வரலாற்று விஜயம்

257 0

போப் பிரான்சிஸ் இன்று வெள்ளிக்கிழமை ஈராக்கிற்கு ஒரு வரலாற்று விஜயத்தை முன்னெடுக்கவுள்ளார்.  கொவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து போப் மேற்கொள்ளும் முதலாவது சர்வதேச பயணமும் இதுவாகும்.

நான்கு நாள் பயணம் ஈராக்கின் குறைந்து வரும் கிறிஸ்தவ சமூகத்திற்கு உறுதியளிப்பதற்கும் மதங்களுக்கு இடையிலான உரையாடலை வளர்ப்பதனையும் நோக்காக கொண்டது.

கடந்த 20 ஆண்டுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் தப்பி ஓடிய ஈராக்கிற்கு ஒரு போப்பாண்டவர் மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும்.

போப்பின் வருகை விசுவாச வரலாற்றில் ஈராக்கிய கிறிஸ்தவர்களின் முக்கியத்துவத்தையும், கிட்டத்தட்ட 4,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய பாபிலோனின் காலத்திற்கு முந்தைய அவர்களின் கலாசார மற்றும் மொழியியல் மரபுகளையும் கருத்தில் கொள்ளும் மதிப்பைக் கொண்டுள்ளது.

ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்களை முதலில் அல்கொய்தாவின் கைகளிலும், பின்னர் ஐ.எஸ்.ஐ.எல் (ஐ.எஸ்.ஐ.எஸ்) கைகளிலும் முறையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பல்லாயிரக் கணக்கானவர்களை புலம்பெயரவும் வழிவகுத்ததுடன், ஈராக்கில் கிறிஸ்தவ சமூகத்தின் சமூகத்தின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகியுள்ளது.

இந் நிலையில் போப்பின் இந்த விஜயத்தில் நினிவே சமவெளியில் ஈராக்கின் மிகப்பெரிய கிறிஸ்தவ நகரமான பாக்தாத், மொசூல் மற்றும் கராக்கோஷ் ஆகிய பகுதி வாழ் மக்களையும் அவர் சந்திப்பார்.

மேலும் எர்பில் லில் போப் குர்திஷ் அதிகாரிகளையும் மத்திய ஈராக்கிலிருந்து 150,000 கிறிஸ்தவ அகதிகளையும் சந்திப்பார்.

அது தவிர ஈராக்கின் மிகவும் மதிப்பிற்குரிய ஷியா முஸ்லிம் மதகுருவை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.