முதலாவது கொரோனா தொற்றாளரிடம் மீள குருதி மாதிரி சேகரிப்பு

339 0

கொரோனாவின் பிடியில் சிக்கிய முதலாவது இலங்கையரிடம் இருந்து ஒரு வருடத்திற்கு பின்னர் மீண்டும் குருதி மாதிரி பெறப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் 11ஆம் திகதி மத்தேகொடயை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான முதல் இலங்கையராக அடையாளம் காணப்பட்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது அவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.

தொற்றுக்குள்ளான நபர் குணமடைந்துள்ள போதிலும் அவரது உடலில் காணப்படும் நோய் எதிர்பு சக்தியை பரிசோதனை செய்வதற்காக மீண்டும் அவரிடம் இருந்து மீண்டும் குருதி மாதிரி பெறப்பட்டது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு பிரிவு ஒன்றினால் இந்த மாதிரி பெறப்பட்டுள்ளது.