சுற்றுலாத்துறை ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பம்!

376 0

சுற்றுலாத் துறை ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட உள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகத்தின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ இவ்விடயம் தொடர்பாக கூறியுள்ளதாவது,  “இலங்கை சுற்றுலா நடவடிக்கைகளை மீண்டும் இயல்பாக தொடங்க வேண்டும்.

அதற்கு முதலில் சுற்றுலாத்துறை ஊழியர்களுக்கு, தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தை விரைவாக ஆரம்பிக்க வேண்டும். இந்த முன்மொழிவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து சிறப்பு தடுப்பூசி திட்டம் எதிர்வரும் வாரங்களில் தொடங்கப்படும். இதேவேளை சுற்றுலாத் துறையின் பங்குதாரர்கள், தற்போது தாங்கள் பதிவுசெய்துள்ள தகவல்களை அனுப்புகின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.