இலங்கை சுதந்திரக் கட்சிக்கு புதிய நிர்வாகக் குழுவை நியமிக்க தீர்மானம்!

299 0

இலங்கை சுதந்திரக் கட்சிக்கு புதிய நிர்வாகக் குழுவை நியமிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கட்சி பிரதிநிதிகள் கூட்டத்திலேயே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தினைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால், “சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் பொருட்டு பல புதிய முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் புதிய அலுவலக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக கட்சிக்கு ஒரு புதிய நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அரசை விட்டு வெளியேற கட்சிக்குள் எந்த விவாதமும் இடம்பெறவில்லையென இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.