யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட துறைமுகத்தின் ஊழியர்கள் – அர்ஜுன ரணதுங்க

375 0

0c5acolarjuna-ranatunga-640x400145615955_5075690_05122016_aff_cmyஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் ஊழியர்கள் கடந்த 9 தினங்களாக மேற்கொண்ட வேலை நிறுத்தப்போராட்டத்தை நிறுத்தி  யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு கடமைக்குத் திரும்பியமையையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாக  துறைமுக கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இக்காலகட்டத்தில் துறைமுக நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டவர்கள் மற்றும் வளங்களுக்குச் சேதம் விளைவித்தவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.