கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

276 0

நிலநடுக்கத்தின் பாதிப்பு அண்டை நாடுகளான அல்பேனியா, வடக்கு மாசிடோனியா மற்றும் கொசோவோ ஆகியவற்றில் இந்த தாக்கம் உணரப்பட்டது.

ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிரீஸ் நாட்டின் லாரிசாவுக்கு அருகிலுள்ள எலசோனா நகரத்தில் திடீரென கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் குலுங்கியது.

அண்டை நாடுகளான அல்பேனியா, வடக்கு மாசிடோனியா மற்றும் கொசோவோ ஆகியவற்றில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. எனினும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பாதுகாப்பாக வெளியேறி வீதிகளில் தஞ்சை அடைந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.