புலத்து இளையோரே! இனத்தின் வலி சொல்ல இதுவும் ஒரு வழியே !

622 0

2009லும் அதன் பின்னரான காலத்திலும், ஈழத்தில் நடந்த துயரின் வடுக்களை, சமகாலத்தில் உலகின் பார்வைக்கு ஓவியமாக்கியிருக்கிறாள் புலம் பெயர் தேசத்து இளம்பெண். ஈழத்தில் யாழ். இணுவிலை தாயகமாகக்கொண்ட பெற்றோருக்கு, சுவிற்சர்லாந்தின் அறோ மாநிலத்தில் புறுக்நகரில் பிறந்த அபிர்சனா.

சுவிற்சர்லாந்து நுண்கைலக் கல்லூரியில் ஓவியத்துறையில் பட்டயக் கல்வியை மேற்கொள்ளும் அவர் உயர் கட்டிடக் கட்டுமான வரைவாளராகவும் மேற்படிப்பினை மேற்கொண்டு வருகின்றார். ஈழத்தில் 2009ல் நடைபெற்ற இன அழிப்பு, பெரும் போர்க் குற்றத்தையும் அதனைத் தொடர்ந்து இன்றுரை தொடரும் சிங்களபௌத்த அடக்குமுறையினையும் கருதுகோளாக்கி இவர் வரைந்த ஒவியம், இன அழிப்பிற்கு ஜெனீவாவில் நீதிகேட்டு பன்னாட்டு சமூகத்திடம் தமிழ் மக்கள் நடாத்திய அறப்போராட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

அபிர்சனா உன்னை வாழ்த்த வார்த்தைகள் இல்லை
புலத்து இளையோரே !
வரலாற்றைப்படி !
வரலாறு படை !

19 வயது நிரம்பிய செல்வி அபிர்சனா சுவிற்சர்லாந்தின் முன்னணி வங்கியான றைப்பைசன் 2019ல் சுவிற்சர்லாந்து நாடுதழுவி இசையால் அசையும் உலகு எனும் பெயரில் நடாத்திய போட்டியில் முதலாவதாக வெற்றியீட்டு அவுஸ்திராய நாட்டிற்கு அழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.