போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளை அடையாளம் காணும் வேலைத்திட்டம் – தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம்

221 0

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம் தீர்மானித்துள்ளது.

கனரக வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் பஸ் சாரதிகள் போதைப் பொருளைப் பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதெனப் போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் தலைவர், வைத்தியர் சவிந்திர கமகே தெரிவித்துள்ளார்.

 

இதனால், பாதசாரிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருளைப் பயன்படுத்தும் சாரதிகளை அடையாளம் காண் பதற்கு, சிறப்பு உபகரணங்கள் மற்றும் அத்தகைய சாரதிகளுக்கு எதி ராகப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்க ப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்