திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கேரளா கஞ்சா அரைக்கிலோவை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க (2) உத்தரவிட்டார்.
ஆராம் கட்டை, கப்பல் துறை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திருகோணமலை கப்பல்துறை பகுதியில் கேரளா கஞ்சா விற்பனை செய்து வருவதாக திருகோணமலை தலைமையக போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அரைகிலோ கேரளா கஞ்சாவுடன் கைது செய்து சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

