தமிழின அழிப்பிற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பால் யாழில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம் வரை சென்று நிறைவடையவுள்ளது.
சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் திட்டமிட்ட இனவழிப்பு விடயங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள பலவீனமான முன்வரைவு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி வேண்டி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றினூடாக தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் இதய சுத்தியுடன் செயற்பட்டு இலங்கை அரசு மீதான காத்திரமான நிலைப்பாட்டை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான அவசர தேவை கருதி -இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தினூடாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு கையளிக்கப்படும் அறிக்கை
2015 ஆம் ஆண்டில் இலங்கை இணைஅனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து சிறிலங்கா விலகியுள்ள நிலையில் -இந்த அறிக்கையை-சர்வதேச குற்றவியல் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுவதற்கான அவசர முறையீடாக-வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களை உள்ளடக்கிய -வடக்கு -கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பினராக,எங்கள் அன்புக்குரியவர்களுக்கானநீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காகசமர்ப்பிக்கிறோம்.
பின்னணி
தன்னிச்சையாகஅல்லது வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்கள்தொடர்பான ஐ.நா. செயற்குழுவின் அறிக்கையின்பிரகாரம்,ஈராக்கிற்கு அடுத்தபடியாகஉலகில் அதிக எண்ணிக்கையிலானவலிந்துகாணாமல் ஆக்கப்;பட்டவர்களதுவழக்குகளைக் கொண்டிருக்கும் நாடாக இலங்கையே உள்ளது.பல தசாப்தகாலமாக , இலங்கையின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறைகள் மற்றும் துணை ராணுவக் குழுக்களின் உதவியுடன் திட்டமிடப்பட்ட மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட, இனவாதநோக்கிலமைந்தவகையில் நீதிக்கு புறம்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்த நிலையிலும், 2009 ஆம் ஆண்டில் யுத்தத்தின் நிறைவில் -இலங்கை இராணுவத்திடம்பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் சரணடைந்த பின்னர் பாரிய அளவிலானோர் காணாமல் ஆக்கப்பட்டு, அவர்கள் தொடர்பிலான விபரங்கள் மறைக்கப்பட்ட நிலையில் -எங்கள் குடும்ப உறவுகளைத் தேடி நாங்கள் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கவனயீர்ப்புபோராட்டங்கள்;, உணவு தவிர்ப்புப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்மற்றும் பேரணிகள் மூலமாக நீதியையும் பொறுப்புக் கூறலையும் வேண்டி தொடர்ச்சியாகப்போராடி வருகின்றோம். நம்பகமான பொறுப்புக் கூறல் பொறிமுறை இன்மையும் மற்றும் நீதி கிடைக்கப்பெறாமையால் ஏற்பட்ட கோபம் விரக்தியின் விளைவுமே நாம் அத்தகைய போராட்டங்களை மேற்கொள்ள தள்ளப்பட்டோம். இலங்கையில் தொடர்ந்து வந்த அரசாங்கங்களால் நியமிக்கப்பட்டிருந்த -வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான ஆணைக்குழுக்கள் தோல்வியில் முடிவடைந்திருந்தும், நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கையில் இப்பொறிமுறைக்குள் நாம் ஈடுபட்டிருந்ததுடன், இலங்கையின் நீதித்துறை பக்கச்சார்பானது என அறிந்திருந்தும் இந்த நீதிமன்றங்களினூடாக நீதி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம்.
இலங்கையின் முன்னாள்ஜனாதிபதி; -ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் 30/1 தீர்மானமானத்தை -நேரத்தை கடத்தும்பொறிமுறை மற்றும் வெளியுறவுக் கொள்கையில் அனுசரணை என்னும் பெயரிலான இராஜதந்திர உபாய வழிமுறைஎன தெரிவித்திருந்த நிலையிலும் கூட -நாங்கள்பல்வேறு நல்லிணக்க பொறிமுறைகளினூடாக நீதி கிடைக்கும் என அதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தோம்.வழக்கமான மிரட்டல், அச்சுறுத்தல்கள், காழ்ப்புணர்ச்சி மற்றும் கைது செய்வதற்கான சாத்தியங்களை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான் மனித உரிமை மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான ஐ.நாடுகள் அவையின் விசேட அறிக்கையாளரான பென் எம்மர்சன், (க்யூ.சி.)2017 இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் –2018 இல் தனது அறிக்கையில் பொறுப்புக்கூறல் இன்மை, தண்டனை, பக்கச்சார்பான நீதி தமிழர்களுக்கு மட்டும் பாரபட்சமான முறையில் பிரயோகிக்கப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டி -இலங்கையின் நீதித்துறை சீரமைக்கப்படவேண்டும் என மேற்கோள் காட்டியுள்ளார்.
குற்றங்கள் மற்றும் தண்டனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் நீதியற்ற மற்றும் உண்மைகளற்றசெயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குப் புதியவையும் அல்ல. 1979 ஆம் ஆண்டில் அவசரகால நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டு 1982 இல் நிரந்தரமாக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை(பி.ரி.ஏ)மாற்றுவதாக, ஐ.நா.வின் தீர்மானம் 30ஃ1 இன் பிரகாரம் உறுதியளித்திருந்தபோதிலும், இன்றுவரை 1979 இல் கொண்டுவரப்பட்ட சட்டம் அழுலில் உள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் அமுல் படுத்தப்பட்ட நாளிலிருந்து தமிழர்களுக்கு எதிரான ஆயுதமாகவே பாவிக்கப்பட்டு வந்திருக்கிறது. மனித உரிமை மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான ஐ.நாடுகள் அவையின் விசேட அறிக்கையாளரான பென் எம்மர்சன்,இதனை ‘‘தமிழ் மக்களைக் குறிவைத்து கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம்’’எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைடிப்படையில், தமிழ் மக்களை பயப்பீதிக்குள்ளும் தண்டனை வழங்குவதற்குமாக உருவாக்கப்பட்ட சட்டமாகவே இன்றும் இது உள்ளது.
30ஃ1தீர்மானத்தின் கீழ் இலங்கை அரசின் பங்களிப்பு வெறுமனே காலத்தைக் கடத்தும்ஒரு பொறிமுறையென நாம் சொல்லிவந்தநிலையில், இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசும் கூட -இது ஒரு காலத்தைக் கடத்தும் பொறிமுறையென நேரடியாகவே சொல்லி வந்திருந்த நிலையிலும் -இந்த இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கமானது, பாரிய குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினருக்கும் பொறுப்பானவர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கிகியிருந்ததோடு பொறுப்புக் கூறலில் இருந்து அவர்களைப் பாதுகாத்தும் வந்திருந்தது எனவும் நாம் கூறி வந்த நிலையிலும், 34/1 தீர்மானம் மூலம் இலங்கைக்கு இரண்டு வருட கால நீட்டிப்பும் வழங்கப்பட்டிருந்தது.2018 ஆம் ஆண்டில், 30/1 தீர்மானத்தின்படி நிறுவப்பட்ட காணாமல்போனோர் அலுவலகத்தின் மீது(ழுஆP)எமக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்து அவர்களிடம் ஒரு அறிக்கையைசமர்ப்பித்தோம், ஏனெனில் -வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக எந்த வெளிப்படைத்தன்மையும்இதில்இல்லை எனவும், பாதிக்கப்பட்டவர்களுடன் எந்தவொரு பொது ஆலோசனையும் இல்லாமல் இரகசியமாக இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது என்பதாலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றத்துக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதுடன் இந்த அலுவலகத்தின் அமைப்பில் வெளிப்படையான முரண்பாடு காணப்படுவதாகவும், சுட்டிக்காட்டியிருந்தோம். காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளருள் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் மொஹந்தி அன்டோனெட் பீரிஸ் 2007 -2010 காலப்பகுதிகளில் இலங்கை இராணுவத்துக்கான தலைமை வழங்கறிஞராக இருந்தவராவார். இந்த காலப்பகுதியிலே, இவர்களின் துணையுடனே பலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.
2009 இல் இலங்கை இராணுவத்தின் 58 ஆவது பிரிவினரிடம் சரணைடைந்தவர்களின் பட்டியல் இன்று வரை வெளியிடப்படாமல் தாமதிக்கப்பட்டு வருவதென்பதே -இலங்கை அரசின் பொறுப்புக்கூறல் இல்லாமைக்கும் தண்டனையற்ற தன்மைக்குமான மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். 2009 இல் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை ழுஆPவெளியிடவேண்டும் என்று பலமுறை நாம் கோரிக்கை விடுத்த போதிலும், சிறிய நம்பிக்கையை கூட ழுஆPஎமக்கு வழங்கியிருக்கவில்லை. தற்போதைய இலங்கையின் அதிபர் கோட்டபாய ராஜபக்ஸ அப்போதைய பாதுகாப்புச் செயலராக இருந்த காலப்பகுதியிலேயே அதே ஆண்டு ஜனவரியில் பலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். 2016 இல் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா.வின் வதிவிடப் இணைப்பாளருக்கு காணாமல் போனவர்கள் ‘இறந்துவிட்டார்கள்’எனவும் தெரிவித்திருந்தார். யுத்தத்தின் போதும், அதற்குப் பின்னரும் இலங்கையின் ஆயுதப் படையினரிடம் சரணடைந்தவர்களின்; பட்டியலை வெளியிடுமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளோம். குறிப்பாக 2008 –2009 ஆம் ஆண்டுகளில் எல்.ரீ.ரீ.ஈ. யினரின் கட்டுப்பாட்டுப்பகுதிகளிலிருந்து வெளியேறியபோது சட்டவிரோதமாகவும், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பாகவும், இலங்கை அரச படைகளால் நடத்தப்படும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பாகவும், விபரங்களை வழங்குமாறு நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளோம்.
ஆயினும் இக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காணாமல் போனோரின் அலுவலகமானது சர்வதேச சமூகத்தின் நலனுக்கான வெறும் கண்துடைப்பாகவே நிறுவப்பட்டது என்பதே உண்மையாகும். இவ்விடயம்உண்மை, நீதி, மற்றும் பொறுப்புக்கூறலுக்கான எமது நடைமுறைத் தேடலைத் தாமதப்படுத்தியதோடு, 30ஃ1 தீர்மானத்திலிருந்து சிறிலங்கா முற்றாக விலகியுள்ளதன் மூலம் உண்மை, நீதி, மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நடைமுறைத் தேடலைத் சாத்தியமற்றதாக்கியியுள்ளது.நீதி, மற்றும் பொறுப்புக்கூறலில் சிறிலங்கா முற்றாக விலகியுள்ளதோடு மட்டுமல்லாமல் –தண்டனை வழங்கப்படாமையால், வலிந்து காணாமல் ஆக்குவதற்கான தலைமையை வழங்கியவர்கள் இன்று இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் ஏறியுள்ளனர். அதேவேளை -இக்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவ மற்றும் உளவுப்பிரிவின் அதிகாரிகளுக்கும் பதவிஉயர்வுகளும்,வெகுமதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டில் (ஐஊPPநுனு)குறிப்பிடப்பட்ட -தெரிந்துகொள்ளும் உரிமை, நீதிக்கான உரிமை, இழப்பீடு பெறுவதற்கான உரிமை, குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான உத்தரவாதம் போன்றவை வெற்று வார்த்தைகளாகவே உள்ளன.
உண்மை, நீதி, மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக எமது நீண்ட கால தேடலுடனான போராட்டம் மிகவும் வேதனையானதாகும். வடக்கு மற்றும் கிழக்கின் 8 மாவட்டங்களிலும் நாம் மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 1800 நாட்களை எட்டியுள்ளது. 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றது. இதன்போதும், இலங்கையின் உளவுத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு இராணுவத்தினரின் மிரட்டல், துன்புறுத்தல்களை எதிர்கொண்டோம். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் எமது போராட்டத்துடன் தீவிரமான இணைந்திருந்த ஏறத்தாள 70 பெற்றோர்களும், குடும்ப உறுப்பினர்களும், தங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையை அறியாமலேயே மரணமடைந்துள்ளார்கள். 2015 ஆம் ஆண்டில் இலங்கை கையெழுத்திட்ட -அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டின் 24 ஆவது பிரிவு, காணாமல் போன நபரை மட்டுமல்ல, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதன் விளைவாக பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களையும் பாதிக்கப்பட்டவர்களாக வரையறுக்கின்றது.
மேலே கூறப்பட்ட விடயங்களின் அடிப்படையில் நோக்கும் போது, இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக, முக்கிய குழுவால் சமீபத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் பூஜ்ஜிய வரைவானதுமிகவும் பலவீனமானதாகும். இதுபோன்ற விடயங்கள்பாதிக்கப்பட்டதமிழ் மக்களுக்குமிகுந்த ஏமாற்றத்தையும், சர்வதேசத்தின் மீது நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமாகும்.காணாமல் ஆக்கியதற்கு காரணமானவர்களே,இன்றுவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்க போவதாக சொல்வது வேதனையானவிடயமாகும்.
30ஃ1 தீர்மானத்தில் இருந்து சிறிலங்கா அரசு விலகியுள்ளதன்பின்னணியில்,பொறுப்புக்கூறல் தொடர்பாகசிறிலங்காவின்விருப்பமின்மைக்கு இதைவிட சிறந்த ஆதாரம் இருக்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதற்காகஇந்த வகையான அரசியல் நாடகங்களையேசிறிலங்காஅரசு அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றது.இந்த பின்னணியில் தான், இலங்கைக்குள்உண்மையையும்; நீதியையும் நிலைநாட்டுவதற்கானஅனைத்து வழிகளையும் நாடி தோற்றநிலையில்,இலங்கையில்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையால்பாதிக்கப்பட்டவர்கள்தொடர்பாக -பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் தண்டனையின்மையால்பாதிக்கப்பட்டவர்களாக –பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்றினூடாக -இந்த குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மூலமாகவோஅல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினுடாகவோ விசாரிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
-வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் அமைப்பு –வடக்கு கிழக்கு

