தென் மாவட்டங்களில் பா.ஜனதாவின் வளர்ச்சி அதிகமாக உள்ளது- மாநில தேர்தல் இணை பொறுப்பாளர்

183 0

தென்மாவட்டங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று மாநில தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.

பரமக்குடியில் பா.ஜ.க. மாநில தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி மிகவும் முக்கியமான தொகுதி. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தலில் யார் நின்றாலும் அவர்கள் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் இருக் கிறது.

6 லட்சம் கோடிக்கு மேல் நலத்திட்ட பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வழங்கி உள்ளார்.

இதுவரை இந்திய அரசியல் வரலாற்றில் எந்த ஒரு பிரதமரும் தமிழகத்திற்கு இதுபோல் திட்டம் செய்யவில்லை.

குறிப்பாக தென்மாவட்டங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. கர்நாடகாவில் தற்போது பா.ஜனதாதான் ஆட்சி தான் உள்ளது.

அதே போல் கேரளாவிலும் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதத்தை அதிகரிப்போம். புதுச்சேரியிலும் பாஜகவை நிலைநாட்ட செய்வோம்.

தி.மு.க.விடம் மக்களுக்கு பெரிய மரியாதைகள் எதுவும் இல்லை. அரசியல் லாபத்திற்காகவும் வாக்கு வங்கிகள் லாபத்திற்காகவும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக போன்ற கட்சிகள் மக்களிடம் தவறான பிரச்சாரத்தை முன் நிறுத்துகின்றனர்.

எந்த காலத்திலும் தி.மு.க ஆட்சிக்கு வராது திமுக ஆட்சியில் இருந்தாலும் முழுக்க முழுக்க அவர்களது குடும்ப அரசியல் ஆட்சி தான் நடந்தது. மக்களுக்கான ஆட்சி நடக்கவில்லை.

விவசாயிகளின் போராட்டம் என்பது சினிமா போன்று திரைக்கதை வசனத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உண்மையான விவசாயிகள் வேளாண் சட்ட மசோதாவால் மகிழ்ச்சியில் தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க, சசிகலா விவகாரம் உட்கட்சி பிரச்சினை இதில் பா.ஜ.க. தலையிடாது. பாஜக கூட்டணி தமிழகத்தில் நிச்சயம் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.